Wednesday, August 30, 2006

பஞ்ச் தந்திர கதை

நம்ம விஜய டி ராஜேந்தர் பஞ்ச தந்திர கதை சொல்றார்.

டேய் ஒரு ஊர்ல இருந்திச்சிடா காக்கா
அது பாட்டி சுட்ட வடையை சுட்டுச்சுடா நேக்கா
உட்கார்ந்ததுடா மரத்துல ஷோக்கா
அப்ப அங்க நரி வந்துச்சுடா ஃப்ளூக்கா

நரி காக்காயை பார்த்து கேட்டுச்சாம்
"காக்கா காக்கா கறுப்பு காக்கா
உன் வடையை கொஞ்சம் தா காக்கா"ன்னு

அதுக்கு காக்கா சொல்லிச்சாம்
"மாமா மாமா நரி மாமா
என் முதுகை கொஞ்சம் சொறி மாமா"ன்னு

அதுக்கு கோவப்பட்ட நரி சொல்லிச்சாம்
"சாம்பார்ல போடுறது பெருங்காயம்
உன் வடையே வேண்டாம்டா வெங்காயம்"ன்னு

இதையே விஜயகாந்த் சொன்னா
டேய்ய்ய்ய், வயசான காலத்துல காஷ்மீர் பார்டர் ஓரமா வடை சுட்ட பாட்டி கிட்ட இருந்து ஒரு பாகிஸ்தான் காக்கா வடையை திருடிச்சி. அமெரிக்கா கிட்ட அடி வாங்கின ஒரு ஆப்கானிஸ்தான் நரி அந்த காக்கா கிட்ட பாடு'ன்னு சொல்லிச்சி. பைத்தியகார காக்கா வாயை தொறந்து பாடி வடையை விட்டுடிச்சி. கீழ விழுந்த வடை நரி தலைல விழுந்து நரி அங்கேயே செத்து போச்சி. வடையை பிடிச்சி இருந்த காக்கா பாடி முடிச்சதும் அதுவும் செத்து போச்சி. ஏன் தெரியுமா? அது இந்திய வடை. இந்தியனை தவிர எவன் அதை தொட்டாலும் அவனுக்கு சாவு தாண்டா.

ஜெய் ஹிந்த்!!

3 comments:

  1. பஞ்சர் ஆகி போன கதை.

    இப்படிக்கு,
    பஞ்சர் கடை பஞ்ச நாதன்.

    ReplyDelete
  2. வர வர அனானிங்க ரொம்பவே கிச்சி கிச்சி மூட்டறாங்க.

    வடைய பாட்டி சுட்டுருந்தாலும் பாட்டிகிட்ட இருந்து சுட்டுச்சே காக்கா அதுதான் சூப்பர்.

    ReplyDelete