Sunday, September 10, 2006

பகுத்தறிவு என்றால் என்ன?

பகுத்தறிவு என்றால் என்ன?
என்ன ஏது என்று புரியாவிட்டால், அதை எதிர்த்து போராடுவது
அழுக்கு தெரியாமல் இருக்க கறுப்பு சட்டை அணிவது
தெரு முனைகளில் கூட்டம் போட்டு அசிங்கமாக பேசுவது
பிடிக்காதவர்களை நடுதெருவில் வைத்து செருப்பு விளக்கமாறு காட்டுவது
கடவுள் இல்லை என்று சாமி சிலைக்கு செருப்பு மாலை போடுவது
அதே சாமி சிலைக்கு பூஜை செய்ய உரிமை கேட்பது
பறவைகளின் கக்கூஸை பகுத்தறிவு சிலை என்பது
வருடம் ஒருமுறை அந்த கக்கூஸுக்கு மாலை போடுவது
அந்த கக்கூஸை வணங்குவது
இவர்கள் மட்டுமே அதை கழுவ உரிமை வேண்டுவது
பூணூல் போட்டவர்களை திட்டி தீர்ப்பது
சண்டைக்கு வராதவர்களிடம் வெட்டி வீரத்தை காட்டுவது
குல்லா போட்டவர்களுக்கு சலாம் போடுவது
வசை வார்த்தைகளை கொண்டு புத்தகம் எழுதுவது
கோவணத்தில் கடவுள் இருக்கிறாரா என்று தேடுவது
ஈழத்தை பற்றி இந்தியாவில் பேசுவது
கறுப்பு வெள்ளையில் போஸ்டர் அடிப்பது
கோயில் கருவறைக்குள் நுழைந்துவிட்டு வெற்றி என்பது
அடிக்கடி தீக்குளித்து உயிருடன் இருப்பது
நிற்க்கும் ரயிலின் முன் பாய்ந்து வீரம் காட்டுவது
தமிழ்நாட்டு கற்பை காப்பாற்றுவது
கற்பை காப்பாற்ற வேட்டியை தூக்குவது
தூக்கிய வேட்டியுடன் போய் சினிமா நடிகையை மிரட்டுவது
பகுத்தறிவுள்ள மெகா சீரியலுக்கு விளக்கு பிடிப்பது
கற்பை போற்றி பாதுகாக்கும் டிவிக்கு குடை பிடிப்பது
ரோடு போடும் தாரை சுவற்றில் அடிப்பது
இவர்களின் பேச்சை கேட்பவர்களையும் வெங்காயமென்பது
மொத்தத்தில் பெரியாரின் பேரை கெடுத்து அவர் மீதான் மதிப்பை உடைத்து குட்டிசுவராக்குவது - பகுத்தறிவு

சாமி இல்லைன்னு சொல்லுறியா. சரி இல்லைன்னு வச்சிக்கோ. எதுக்கு செருப்பு மாலை போட்டு உன் கீழ்தர புத்தியை காட்டுற. மனசு எப்படியோ அது தான் வெளியவும் வரும். காசு மாலை போடுறவன் பணக்காரன். பூமாலை போடுறவன் மரியாதையானவன். செருப்பு மாலை போடுறவன் செருப்புக்கு சமானம் தான்.

வேதம் புராணம் எல்லாம் பொய். எல்லாம் கதை. இருந்துட்டு போகுது. நீ படிக்காதே. உனக்கு புரியாட்டி அதை போட்டு ஏன் எரிக்கிறே? அடுத்தவனுக்கு புரியுதேன்னு உனக்கு ஏன் வயிறு எரியுது? வேதம் படிச்சவன் அவன் வேலையை பார்த்துட்டி போனா, நீ ஏன் அவன் பின்னாடி வேட்டியை தூக்கிட்டு போற? உனக்கு வேலை இல்லையா?

பார்ப்பான் சண்டைக்கு வர மாட்டான்னு நல்லா தெரிஞ்சி அவங்களை மட்டும் எதிர்க்கிறது. கவுண்டர், தேவர் கிட்ட போய் இப்படி பேசிப்பாரு.. வகுந்துடுவாங்க. முஸ்லீம் பத்தி பேசிப்பாரு. நடக்குறது தெரியும்.

சிலையை கழுவி சந்தனம் பூசினா தப்பா?. தப்பு தான். பகுத்தறிவோட செருப்பு மாலை போட்டு சாணியை பூசி இருந்தா மனுஷ குணம்னு சொல்லி இருப்பாங்க. பாவம் மரியாதை செய்ய தெரியாம சந்தனம் பூசிட்டாங்க.

சினிமாகாரி வாயிலதான் தமிழ் பெண்கள் கற்பு இருக்கா? யாரோ ஏதோ சொல்லிட்டாங்களாம், இவங்க போய்ட்டாங்க வேட்டியை தூக்கிகிட்டு. நல்ல பொழப்புடா உங்களோடது.

உங்களை மாதிரி சீடரை எல்லாம் திருத்த பெரியார் திரும்பி பொறக்கணும். அதுக்கு நான் கடவுளை கும்பிட்டுக்குறேன்.

Saturday, September 09, 2006

ஒரு காட்டுல ஒரு நரி

ஒரு காட்டுல ஒரு நரி இருந்திச்சாம்.

அந்த காட்டுல இருந்த மத்த மிருகம் எல்லாம் இதை மதிக்காம புறக்கணிச்சி, திட்டி அடிச்சி கொடுமை பண்ணிச்சாம். பொறுத்து பொறுத்து பார்த்த நரி ஒரு நாள் வெறி பிடிச்சி கடவுளை நோக்கி தவம் பண்ணிச்சாம். கடவுளும் நரி முன்னாடி தோன்றி என்ன வரம் வேணும்னு கேட்டுச்சாம். நரி சொல்லிச்சாம்,

நான் ரொம்ப சின்னவனா இருக்கேன், யாரையும் என்னால பணிய வைக்க முடியல, பலம் குடு, ஆயுதம் குடு, எல்லாரையும் எதிர்க்க துணிவு குடுன்னு.

சாமி சொல்லிச்சாம்
நான் இந்த வரம் தர்றேன். ஆனா ஒண்ணு, உன் பலத்தோட இருக்கிறவன் கிட்ட மோதணும், உன்னைவிட பலம் குறைஞ்சவன்கிட்ட மோதுனா உன் பலம் குறைஞ்சி கிட்ட வரும், கடைசியில நீ இப்ப இருக்குற மாதிரி ஆயிடுவேன்னு சொன்னாராம்.

நரியும் சரின்னு சொல்லிட்டு வரத்தை வாங்கிட்டு சாமிகிட்ட நன்றி சொல்லிட்டு ஒரு கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்துச்சாம். அங்கே நரி தெரியலியாம், சர்வ வல்லமை படைத்த புலி மாதிரி தெரிஞ்ச்சிசாம். காட்டுல பகட்டா திமிரோட திரிஞ்ச பல மிருகத்துக்கு இந்த நரி-புலியை பார்த்து பயம் வந்து மரியாதை குடுக்க ஆரம்பிச்சதாம். பக்கத்து காட்டுல இருந்த பல நரிகளும் இந்த புலிக்கு பாராட்டி ஊக்கம் குடுத்திச்சாம்.

ஒழுங்கா இருந்த புலிக்கு கொஞ்ச நாள் கழிச்சி திமிர் பிடிச்சதாம். தாந்தான் பெரிய ஆள், எல்லாரும் அதுக்கு அடங்கி இருக்கணும்னு நினைச்சதாம். அது கூட சமமா இருந்தவங்களை எல்லாம் அடிச்சி சாப்பிட்டுச்சாம். ஏண்டா இப்படி பண்றன்னு கேட்டவங்களையும் அடிச்சி கொன்னுதாம். பக்கத்து காட்டுக்கு எல்லாம் போய், ஏண்டா என் காட்டுக்குள்ள வர்றன்னு அங்கே இருந்தவங்களையும் கொன்னிடிச்சாம். இவ்வளவு நாள் கூட இருந்த பலரும் பிரிஞ்சி போக ஆரம்பிச்சாங்களாம்.

பலம் இருந்த திமிருல பலரையும் கொல்ல கொல்ல, சாமி சொன்னா மாதிரி புலியோட பலம் குறைஞ்சி கிட்ட வந்ததாம். அப்போ காட்டுல இருந்த மத்த மிருகங்கள் இதை அடிக்க ஆரம்பிச்சதாம். வலிக்குதுன்னு பக்கத்துல இருந்த எந்த காட்டுக்கு போனாலும் இதை துரத்தி விட்டாங்களாம். கூட இருந்தவங்க எல்லாம் பத்திரமா ரொம்ப தூரம் போய் தங்கிட்டு இந்த புலியை பார்த்து
பயப்படாதே நீ சண்டை போடு. அது உன் காடு. உன் சொத்துன்னு தூண்டி விட்டு சாப்பாடு அனுப்பி அந்த புலிக்கு தைரியம் குடுத்துச்சாம். புலியும் விடாம சண்டைக்கு போய் அங்கங்கே அடி வாங்கிச்சாம்... அப்புறம்.. மீதி கதை அப்புறம்.


பின் குறிப்பு : இது ஒரு கற்பனை கதை. இலங்கையில் சுதந்திரத்துக்காக போராடும் புலிகளுக்கும், புலம் பெயர்ந்து போராடும் அல்லது வாழும் சகோதரர்(ரி)களுக்கும், இதுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.

Wednesday, August 30, 2006

பஞ்ச் தந்திர கதை

நம்ம விஜய டி ராஜேந்தர் பஞ்ச தந்திர கதை சொல்றார்.

டேய் ஒரு ஊர்ல இருந்திச்சிடா காக்கா
அது பாட்டி சுட்ட வடையை சுட்டுச்சுடா நேக்கா
உட்கார்ந்ததுடா மரத்துல ஷோக்கா
அப்ப அங்க நரி வந்துச்சுடா ஃப்ளூக்கா

நரி காக்காயை பார்த்து கேட்டுச்சாம்
"காக்கா காக்கா கறுப்பு காக்கா
உன் வடையை கொஞ்சம் தா காக்கா"ன்னு

அதுக்கு காக்கா சொல்லிச்சாம்
"மாமா மாமா நரி மாமா
என் முதுகை கொஞ்சம் சொறி மாமா"ன்னு

அதுக்கு கோவப்பட்ட நரி சொல்லிச்சாம்
"சாம்பார்ல போடுறது பெருங்காயம்
உன் வடையே வேண்டாம்டா வெங்காயம்"ன்னு

இதையே விஜயகாந்த் சொன்னா
டேய்ய்ய்ய், வயசான காலத்துல காஷ்மீர் பார்டர் ஓரமா வடை சுட்ட பாட்டி கிட்ட இருந்து ஒரு பாகிஸ்தான் காக்கா வடையை திருடிச்சி. அமெரிக்கா கிட்ட அடி வாங்கின ஒரு ஆப்கானிஸ்தான் நரி அந்த காக்கா கிட்ட பாடு'ன்னு சொல்லிச்சி. பைத்தியகார காக்கா வாயை தொறந்து பாடி வடையை விட்டுடிச்சி. கீழ விழுந்த வடை நரி தலைல விழுந்து நரி அங்கேயே செத்து போச்சி. வடையை பிடிச்சி இருந்த காக்கா பாடி முடிச்சதும் அதுவும் செத்து போச்சி. ஏன் தெரியுமா? அது இந்திய வடை. இந்தியனை தவிர எவன் அதை தொட்டாலும் அவனுக்கு சாவு தாண்டா.

ஜெய் ஹிந்த்!!

Friday, August 25, 2006

15 வயசுலே கல்யாணம்

ஆம்பளை பசங்களுக்கு 15 வயசுல கல்யாணம் பண்ணி வச்சா என்ன நன்மை?

- பத்தாம் வகுப்பு ஒழுங்கா பாஸ் பண்ணுவாங்க.
- பன்னிரெண்டாம் வகுப்பு ஒழுங்கா பாஸ் பண்ணுவாங்க
- சைட் அடிக்கிறது குறையும்
- காதல் கவிதை எழுதுறது குறையும்
- காலேஜ் போகும் போது பஸ்ல தொங்க மாட்டாங்க
- பைக்கை வேகமா ஓட்டி போக மாட்டாங்க
- நைட் வெளியே சுத்த மாட்டாங்க
- குறிஞ்சி, முல்லை மாதிரி புத்தக வியாபாரம் குறையும்
- லவ் மேரேஜ் குறையும்
- பொறுப்பு கொஞ்சம் சீக்கிரமாவே வரும்
- மாமியார் மருமகள் சண்டை குறையும். காரணம் மருமக சின்ன பொண்ணு தானே, மாமியார் நல்லா மிரட்டி வச்சிடுவாங்க :-)

ஆம்பளை பசங்களுக்கு 15 வயசுல கல்யாணம் பண்ணி வச்சா என்ன தீமை?

- பையனோட அப்பா, மருமகளுக்கும் சேர்த்து சம்பாதிக்கணும்
- பையன் வேகமா இருந்துட்டா, பேரனுக்கும் சேர்த்து பையனோட அப்பா தான் சம்பாதிக்கணும்.
- பொண்ணுங்க காலேஜ் போகும் போதோ இல்ல +2 படிக்கும் போதோ 3 மாசம் லீவ் எடுக்க வேண்டி வரும். படிப்பு கெட்டுப் போகும்.
- ஆண் சர்வாதிகாரம் அதிகரிக்கும்
- மக்கள் தொகை பெருகும்
- பீர் வியாபாரம் குறையும்.(இது நன்மையா? தீமையா?)
- மாமியார் மாமனார் கொடுமை அதிகரிக்கும்
- வீட்டோட மாப்பிள்ளையா இருக்குற பசங்களுக்கு படிப்பு பிரஷர் அதிகரிக்கும். (ஃபெயிலானா மாமனாரும், மாமியாரும் குத்தி காட்டுவாங்க)
- முக்கியமான தீமை ஒண்ணு - 35 வயசுல எல்லாரும் தாத்தா ஆய்டுவாங்க :-(

எங்கப்பாரு கிட்ட யாரும் இந்த பதிவை பத்தி சொல்லிடாதீங்க... அப்புறம் அடடாவுக்கு... ச்சீ சொல்ல வெக்கமா இருக்கு.. இருந்தாலும் சொல்லுறேன், பிஞ்சுல பழுத்துட்டியான்னு பெல்ட் பிஞ்சு போற வரை அடிப்பாரு.

Tuesday, August 22, 2006

அடடா - மச்சி

ஒரு வயசு பையனுக்கு அட்வைஸ் பண்ற கவிதை(?).
அட்வைஸ் 1:சைட் அடிக்க போறவனுக்கு
சும்மா நச்சுன்னு இருக்குற மாலை
சில்லுன்னு காத்தடிக்கும் கடற்கரை சாலை
வானவில்லாய் மாணவிகள் நடக்கும் வேளை
மச்சி-போடுடா முடிஞ்ச வரை கடலை.

வயசு உனக்கு இருக்கு
மீசை இருந்தா அதை கொஞ்சம் முறுக்கு
உன் திமிரை மொத்தமா நொறுக்கு
மச்சி-அவ இதயத்துல போடு சுறுக்கு

அட்வைஸ் 2:கண்ணு மண்ணு தெரியாம பைக் ஓட்றவனுக்கு.
வேகமா போகும் தண்ணி லாரி
நெருங்கி போகாதே அது மண்ணு லாரி
பேச்சை கேளுடா பிரம்மச்சாரி
மச்சி-மீறி நீயும் ஆகாதே நாதாரி

அட்வைஸ் 3:காதலியை காக்க வைக்கிறவனுக்கு
நேரத்துக்கு போடா மச்சி
எல்லாப்பொண்ணும் ஒரு ஐஸ் குச்சி
உருகிடும்டா அது நேரம் கழிச்சி
பொண்ணுக்கு பிடிக்கும் பட்டு சாரி
மச்சி-காதலிகிட்ட சொல்லாத ஐயம் ஸாரி.

அட்வைஸ் 4:பொண்ணோட அருமை பற்றி
நெஞ்சை கிழிச்சவர் அனுமான்
என்னைக்கும் நீதான் பயில்வான்
தூது போகாது அந்த நீலவான்
மச்சி-எப்பவும் பொண்ணு ஒரு புள்ளிமான்

அட்வைஸ் தொடரும்..

Sunday, August 20, 2006

யோசிக்கிறேன்

அடடா!!

யார் இவன்.. புதிதாய்???

இவன் பெயர் : சுருக்கமாய் பரத்.

வயது : என்றும் 18

ஏன் இந்த பதிவு?
இவன் சொந்த கருத்துக்களை போட்டு வைக்கத்தான்.

என்ன எழுத போகிறான்?
இந்த பால் வெளி மண்டலத்தில் இருக்கும் எல்லாவற்றையும் பற்றித்தான்.

யார் வலைபதிவை அறிமுகம் செய்தது?
முதலில் கூகிள். அப்புறம் தமிழ்மணம்.

பிடித்தது?
வாக்குவாதம்.

பிடிக்காதது?
விதண்டாவாதம்

அடடா முதலில் எதைப் பற்றி எழுதுவது???

யோசிக்கிறேன்...

அடடா!

அடடா!
எனக்கும் தமிழ் டைப் பண்ண வருதே?
அடடா!!
எனக்கும் தமிழ் டைப் பண்ண வருதே??
அடடா!!!
எனக்கும் தமிழ் டைப் பண்ண வருதே???

இப்படிக்கு
அடடா!