Wednesday, February 07, 2007

எல்லோரும் ஒருநாள் டோண்டுதான்

முக்கிய முன் குறிப்பு : டோண்டு சார் செய்தது/செய்வது சரியா தவறா என்பதை பற்றி அல்ல இந்த பதிவு.

ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. யாரையாவது வலைபதிவில் இருந்து தூக்க வேண்டுமென்றால்..

1. அவரை பத்தியும் அவர் குடும்பத்தை பத்தியும் தரகுறைவாக எழுத வேண்டும். தமிழில் உள்ள பெரும்பாலும் புழக்கத்தில் இல்லாத உடல் உறுப்புகளை கொச்சையாக குறிக்க கூடிய வார்த்தைகளையிட்டு ஈ-கடிதம் அனுப்ப வேண்டும்.

2. அவர் பதிவில் பின்னூட்டம் போடுறவங்களுக்கும் அதே கதி வரணும். பிறகு கொஞ்ச நாளில் சம்மந்தப்பட்ட வலை பதிவர் எழுதுவதை நிறுத்தி விடுவார். அப்புறம் "வெற்றி" "வெறி ஒழிந்தது"ன்னு கோஷம் போட வேண்டியது.

டோண்டுவை மறந்து இந்த சூழ்நிலையை கவனிக்க வேண்டும். நீங்கள் ஒரு கருத்து சொல்கிறீர்கள். எனக்கு அது பிடிக்கவில்லை, எதிர்க்கிறேன். நீங்கள் கேட்பதாய் இல்லை. மீண்டும் மீண்டும் அதை பற்றியே பேசுகிறீர்கள். நான் உடனே ஒரு அவதாரம் எடுத்து உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பற்றி நாரசாரமாய், ஆபாசமாய் எழுதுகிறேன். உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுபவரையும் அப்படியே செய்கிறேன். என்ன நடக்கும்? இப்போது டோண்டுவுக்கு நடந்ததே தான் நாளை உங்களுக்கும்.

வலை பதிவில் இதை தான் எழுதணும், எழுத கூடாதுன்னு சட்டம் இல்லை. கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். ஒருத்தர் கருத்து பிடிக்கலியா அவர் பதிவுக்கு போவதை தவிர்க்கலாம். டோண்டு எழுதியது பிடிக்கவில்லையா அவர் பதிவு பக்கமே போய் இருந்திருக்க தேவை இல்லை. பிடிக்காதவருக்கு ஆதரவே தந்து இருக்க கூடாது.

ஒருவகையில் அவர் பக்கம் நியாயமாகப் படுகிறது. இருப்பினும் நியாயம் அநியாயம் பற்றி பேச எனக்கு அருகதை இல்லாததால்(நானும் முகமிலி தானே, அதனால்) அதை பற்றி எதுவும் இங்கே பேசவில்லை.

போலியின் எழுத்து நடையும், டோண்டுவின் எழுத்து நடையும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. அதனால் போலியும், டோண்டுவும் ஒன்று என்கிற வாதம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அலசி பார்த்ததில், மர்ம தொடர் தலைப்பு பதிவரின் நடையும், போலியின் நடையும் ஒத்துப் போகிறது. என் கணிப்பு தவறாகவும் இருக்கலாம்.

பின் குறிப்பு 1 : ஒரே நாளில் டோண்டுவை தவிர மற்ற எல்லாரும் நல்லவர் ஆகி விட்டார்கள். அதைத்தான் என்னால் நம்ப முடியவில்லை.

பின் குறிப்பு 2: நான் டோண்டுவிற்க்கு என் அசல் முகத்துடன் பின்னூட்டமிட்டு, போலியிடம் வாங்கிக்கட்டிக் கொண்டவன். :-)

பின் குறிப்பு 3 : தலைப்பு ஒரு கவர்ச்சிக்கு தான் ;-)