Tuesday, August 23, 2011

சில பல வருடங்களுக்கு பின்பு12 வது சமச்சீர் கல்வியாண்டு, 12ம் வகுப்பு முதல் நாள்:

ஆசிரியர்: மாணவர்களே, இதுவரை நீங்கள் படித்தது எல்லாம் சுலபம். இந்த வருடம் மிக கடினமாக இருக்கும். மிகவும் கவனமாக படிக்கவும். இது தான் உங்கள் கல்லூரி வாழ்க்கையை முடிவு செய்ய போகிறது. இப்போது பாடத்தை துவக்குவோம்.
உரக்க சொல்கிறார்
"ஒள"
- பார்த்தீர்களா? ஒன்றாம் வகுப்பில் இருந்து 11 வகுப்பு வரை, ஒற்றை எழுத்தை தான் எழுதி படித்தீர்கள் - அ, ஆ, இ, ஈ ...ஒ, ஓ என்று. முதல் முறையாக இரு எழுத்துக்கள் இணைந்து ஒரு எழுத்தாக வருகிறது. இதற்கு பின் வரும் ஆய்த எழுத்தை நீங்கள் சமசீர் கல்லூரியில் படிக்கலாம்....
----------------------------------
15 வருடங்களுக்கு பின்பு....
தொடர் மழை காரணமாக காஷ்மீரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பேங்கலூரூ சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக முடியவில்லை என்று, செல்வி  வக்கீல் தெரிவித்தார்.
---------------------------------
20 வருடங்களுக்கு பின்பு....
எனக்கும் கலிங்சர் டிவி சாட்டிலைட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் விண்வெளி துறை சம்பத்தப்பட்டவளும் இல்லை. சாட்டிலைட் எப்படி வேலை செய்கிறது என்று எனக்கு தெரியாது. நான் பட்டன் மட்டும் தான் அமுக்கினேன், அது விர்'ரென்று சென்றது என பனிமொழி கமம்சங் விழாவில் தெரிவித்தார். அவர் மீது சிபி'ஈ' 30G வழக்கில் ஆஜராகும்படி அழைப்பு விடுத்துள்ளது
----------------------------------
25 வருடங்களுக்கு பின்பு
என் தாத்தா விட்டு சென்றது எனக்கான ஊக்கத்தை, ஆக்கத்தை, தாக்கத்தை, தூக்கத்தை.. நான் பின் வாங்க மாட்டேன்.. மூன்று வேலைக்கு மேலே தின்ன மாட்டேன்.. ஜன் (கா பேட்டா) லோக்பால் வரும் வரை தூங்க மாட்டேன்... என்று அன்னபா பசாரேவின் பேரன் சூடான பேட்டி அளித்தார். மேலும் அவர் தனது "அடுத்த " சாகும்வரை உண்ணாவிரத தேதியை அடுத்த மாதம் அறிவிப்பதாக தெரிவித்தார்.

--------------------------------
எத்தனையோ வருடங்களுக்கு பின்பு....
எனக்கு பிறகு யார் தலைவர் என்பதை பொதுக்குழு/செயற்குழு முடிவு செய்யும் என்று கலிங்சர்  தெரிவித்தார். அதை டாச்லின் மற்றும் பழகிரு ஆமோதித்தனர்.

Monday, August 22, 2011

லஞ்சம் ஒழிக - 1


ஜன் லோக்பால் ஊழலை விசாரிக்க போகிறது. ஏன் அதை தடுக்க நாம் முயற்சிக்க கூடது?

ஊழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? - நம் அவசரத்தில்.

நிதானமாக யோசிப்போம்.
1) அரசு துறையில் நமக்கு ஒரு காரியம் நடக்கணும். ஒழுக்கமாய் தேவையான ஆவணங்களை கொடுத்தாயிற்று. ஆனால் பிரச்சினையே அது எப்போது நடக்கும்/முடிக்கப்படும் என்று நமக்கு தெரியாது. இங்கு தான் நம் குறுக்கு புத்தி / லஞ்ச புத்தி தலை தூக்கி பார்க்கிறது. இதைத் தான் அரசு அதிகாரிகளும் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். நம் தலையை கொய்கிறார்கள்.

என்ன செய்யலாம்?
ஒவ்வொரு வேலைக்கும் இத்தனை நாட்கள் ஆகும் என்று வரைமுறை செய்ய வேண்டும். கால தாமதம் ஆகும் என்றால் முறையான காரணம் தர வேண்டும் என நிர்பந்திக்கலாம். தட்கல் முறையையும் வைத்து அவசர தேவைகளுக்கு முறையான கட்டணத்துடன் சேவை அளிக்கலாம். இது லஞ்ச வேரை மேலும் வளர விடாமல் தடுக்கும்.

சொல்லுவது சுலபமாக இருந்தாலும், இதை செயல் படுத்த சில காலம் ஆகலாம். அரசு துறை வேலைகளை முறைப் படுத்த வேண்டும். தேவையான ஆட்களை நியமித்து பயிற்றுவிக்க வேண்டும். அனைவரையும் கண்காணிக்கும் அமைப்பையும் கொண்டு வர வேண்டும். மக்களிடம் அவர்களின் எதிர்பார்ப்பை பதிவு செய்து, தேவையான, முன்னேற்றத்துக்கு அவசியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

யார் செய்ய வேண்டும்?
முதலில் மாவட்ட ஆட்சியாளரிடம் இருந்து தொடங்கலாம். நிறைய படித்த, ஊக்கம் நிறைந்த, வேகமும், விவேகமும் கொண்ட இந்த இளம் தலைமுறை (மாவட்ட) ஆட்சியாளர்கள் இந்த மாற்றத்தை தொடங்கலாம்.

யார் உதவுவது?
எந்த புது முயற்சிக்கும் அரசு பணம் தரப்போவது இல்லை. எனவே ஆரம்பகட்ட வேலைகளில் தன்னார்வ குழுக்களின் உதவியை ஏற்றுக்கொள்ளலாம். கல்லூரி மாணவர்கள் பகுதி நேரம் இதில் செலவிடலாம். ஒரு தெளிவான நிலைக்கு வந்ததும், அரசிடம் சமர்பித்து அதற்கான நிதியை கேட்கலாம். நிச்சயமாக ஒரு மாவட்ட ஆட்சியாளரால் இந்த மாற்றங்களை ஆரம்பிக்க முடியும்.

2) போக்குவரத்து விதிமீறல்கள்
நம்மில் எத்தனையோ பேர் எத்தனையோ முறை பல தவறுகள் செய்து சாலை காவலர்களிடம் மாட்டி இருக்கிறோம். உடனடி நிவாரணம் - கையூட்டு எனப்படும் லஞ்சம். நாமும் தருவோம், அவர்களும் வாங்குவார்கள். யாருக்கும் வெட்கம் இல்லை.

என்ன செய்யலாம்?

Friday, August 19, 2011

அண்ணா ஹாஜாரே

அண்ணா ஹாஜாரே க்கு என் ஆதரவினை பதிவு செய்கிறேன்.
அவர் நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் அவர் நோக்கம் சரியாக இருப்பதால் தான் ஆதரவு. நல்லது நடக்கட்டும்.