Wednesday, February 07, 2007

எல்லோரும் ஒருநாள் டோண்டுதான்

முக்கிய முன் குறிப்பு : டோண்டு சார் செய்தது/செய்வது சரியா தவறா என்பதை பற்றி அல்ல இந்த பதிவு.

ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. யாரையாவது வலைபதிவில் இருந்து தூக்க வேண்டுமென்றால்..

1. அவரை பத்தியும் அவர் குடும்பத்தை பத்தியும் தரகுறைவாக எழுத வேண்டும். தமிழில் உள்ள பெரும்பாலும் புழக்கத்தில் இல்லாத உடல் உறுப்புகளை கொச்சையாக குறிக்க கூடிய வார்த்தைகளையிட்டு ஈ-கடிதம் அனுப்ப வேண்டும்.

2. அவர் பதிவில் பின்னூட்டம் போடுறவங்களுக்கும் அதே கதி வரணும். பிறகு கொஞ்ச நாளில் சம்மந்தப்பட்ட வலை பதிவர் எழுதுவதை நிறுத்தி விடுவார். அப்புறம் "வெற்றி" "வெறி ஒழிந்தது"ன்னு கோஷம் போட வேண்டியது.

டோண்டுவை மறந்து இந்த சூழ்நிலையை கவனிக்க வேண்டும். நீங்கள் ஒரு கருத்து சொல்கிறீர்கள். எனக்கு அது பிடிக்கவில்லை, எதிர்க்கிறேன். நீங்கள் கேட்பதாய் இல்லை. மீண்டும் மீண்டும் அதை பற்றியே பேசுகிறீர்கள். நான் உடனே ஒரு அவதாரம் எடுத்து உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பற்றி நாரசாரமாய், ஆபாசமாய் எழுதுகிறேன். உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுபவரையும் அப்படியே செய்கிறேன். என்ன நடக்கும்? இப்போது டோண்டுவுக்கு நடந்ததே தான் நாளை உங்களுக்கும்.

வலை பதிவில் இதை தான் எழுதணும், எழுத கூடாதுன்னு சட்டம் இல்லை. கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். ஒருத்தர் கருத்து பிடிக்கலியா அவர் பதிவுக்கு போவதை தவிர்க்கலாம். டோண்டு எழுதியது பிடிக்கவில்லையா அவர் பதிவு பக்கமே போய் இருந்திருக்க தேவை இல்லை. பிடிக்காதவருக்கு ஆதரவே தந்து இருக்க கூடாது.

ஒருவகையில் அவர் பக்கம் நியாயமாகப் படுகிறது. இருப்பினும் நியாயம் அநியாயம் பற்றி பேச எனக்கு அருகதை இல்லாததால்(நானும் முகமிலி தானே, அதனால்) அதை பற்றி எதுவும் இங்கே பேசவில்லை.

போலியின் எழுத்து நடையும், டோண்டுவின் எழுத்து நடையும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. அதனால் போலியும், டோண்டுவும் ஒன்று என்கிற வாதம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அலசி பார்த்ததில், மர்ம தொடர் தலைப்பு பதிவரின் நடையும், போலியின் நடையும் ஒத்துப் போகிறது. என் கணிப்பு தவறாகவும் இருக்கலாம்.

பின் குறிப்பு 1 : ஒரே நாளில் டோண்டுவை தவிர மற்ற எல்லாரும் நல்லவர் ஆகி விட்டார்கள். அதைத்தான் என்னால் நம்ப முடியவில்லை.

பின் குறிப்பு 2: நான் டோண்டுவிற்க்கு என் அசல் முகத்துடன் பின்னூட்டமிட்டு, போலியிடம் வாங்கிக்கட்டிக் கொண்டவன். :-)

பின் குறிப்பு 3 : தலைப்பு ஒரு கவர்ச்சிக்கு தான் ;-)

31 comments:

  1. அடடா! இது என்ன சோதனை?

    ReplyDelete
  2. டோண்டு கிழவன் முரளி மனோஹர் என்ற பெயரில் செல்வன் பதிவில் யாரோ வேலை பார்க்கும் கம்பெனி முகவரியை எழுதி இருந்தானே? அதுக்கு என்னா சொல்றே? அவன் ரொம்ப நல்லவனா?

    ReplyDelete
  3. ராஜாவனஜ் பதிவில் டோண்டு நாய் முரளி மனோஹர் என்ற பேரில் ஆபாசமாக எழுதிய போது என்ன செய்தே?

    ReplyDelete
  4. //அவர் பதிவில் பின்னூட்டம் போடுறவங்களுக்கும் அதே கதி வரணும். பிறகு கொஞ்ச நாளில் சம்மந்தப்பட்ட வலை பதிவர் எழுதுவதை நிறுத்தி விடுவார். அப்புறம் "வெற்றி" "வெறி ஒழிந்தது"ன்னு கோஷம் போட வேண்டியது.//
    அவிங்க துரதிர்ஷ்டம் அந்த யுக்தியை இந்த அருபது வயது இளைஞன் கிட்ட காட்டினாங்க. அவன் என்ன செஞ்சான்? உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பேன்னு சொல்லிட்டான். அவிங்க குய்யோ முய்யோன்னு கத்துறாங்க. இளைஞனோட ஹிட் கவுண்டமணி ஏறோ ஏறுன்னு ஏறுது. நன்றி மக்களே.

    அப்புறம் என்னமோ நான் மட்டும்தான் இன்னொரு பெயரிலே பின்னூட்டம் இட்டேங்கற ரேஞ்சுலே இருக்கிற என் "நலவிரும்பிகளுக்கு" ஒண்ணு கூறிக்கிறேன்.

    முரளி மனோஹர்னு யாராவது நிஜமாகவே பதிவர் இருக்காங்களா. அவங்களை முரளி மனோஹர் அப்படியே நகல் இட்டானா, அத்தோட முரளி மனோஹர் எல்லாரையும் போயி ஆத்தா அம்மான்னு திட்டினானா?

    அதே மாதிரி என்னோட நண்பர்களான செர்வாண்டெஸ், ஹாரி பாட்டர், கட்டபொம்மன், பஜ்ஜி எல்லோரும் ஏதவது ஆபாசமா எழுதினாங்களாங்கறதையும் பாத்துக்குங்க. அவர்களுக்கு என் நன்றியையும் இங்கே தெரிவிச்சுக்கிறேன்.

    இப்போ கேக்கறேன், அவங்க எனக்கு பின்னூட்டம் இட்டதால என்ன கொறைஞ்சு போயிட்டாங்க? பாதுகாப்போட செயல்பட்டதால (நான் கொடுத்த ஐடியா) என்ன ஆச்சு? அவங்கள்ளாம் நானுன்னு சொன்னாங்க. அவ்ளோதானே, சொன்னா சொல்லிட்டு போகட்டுமே.

    இதையெல்லாம் யோசிங்க மக்களே.

    //இருப்பினும் நியாயம் அநியாயம் பற்றி பேச எனக்கு அருகதை இல்லாததால்(நானும் முகமிலி தானே, அதனால்) அதை பற்றி எதுவும் இங்கே பேசவில்லை.//
    உங்களுக்கு கண்டிப்பாக உண்டு அடடா அவர்களே. வாழ்க.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. இத்தனைபேர் வழிய வழிய காறித் துப்பியும் திருந்தாத ஜென்மத்திற்கு இனியும் எத்தனை பேர் எழுதினாலும் மண்டையில் ஏறாது.

    அடுத்து அடடா என்ற பெயரில் அவருக்கு ஆதரவாக கருத்துகள் எழுதி தனக்குத்தானே பின்னூட்டமும் போட்டுக் கொள்ளட்டும்!

    ReplyDelete
  6. வழக்கம் போல ஆபாச பின்னூட்டங்கள். முகம் காட்டாத என்னிடம் ஏன் உன் வீரத்தை காட்டுறே?? உனக்கு பயந்து தானே நான் முகமூடி போட்டு இருக்கேன். அப்புறம் என்ன??

    ReplyDelete
  7. //
    டோண்டு கிழவன் முரளி மனோஹர் என்ற பெயரில் செல்வன் பதிவில் யாரோ வேலை பார்க்கும் கம்பெனி முகவரியை எழுதி இருந்தானே? அதுக்கு என்னா சொல்றே? அவன் ரொம்ப நல்லவனா?
    //
    அனானி நண்பா. உன் கேள்வி சரி தான். ஆனால், டோண்டு நல்லவரா கெட்டவரா என்ற விவாதத்திற்க்கு நான் போகவில்லை.

    ReplyDelete
  8. //
    ராஜாவனஜ் பதிவில் டோண்டு நாய் முரளி மனோஹர் என்ற பேரில் ஆபாசமாக எழுதிய போது என்ன செய்தே?
    //
    அனானி நண்பா. உன் எதிர்ப்பு சரியாய் இருக்கலாம். அந்த பதிவை/பின்னூட்டத்தினை நான் படிக்கவில்லை

    ReplyDelete
  9. அந்த பின்னூட்டத்தை படிக்காமல் எப்படி நீ டோண்டுக்கு ஆதரவு அளிக்கலாம்?

    ReplyDelete
  10. //
    அனானி நண்பா. உன் எதிர்ப்பு சரியாய் இருக்கலாம். அந்த பதிவை/பின்னூட்டத்தினை நான் படிக்கவில்லை
    //
    //
    அந்த பின்னூட்டத்தை படிக்காமல் எப்படி நீ டோண்டுக்கு ஆதரவு அளிக்கலாம்
    //
    அனானி நண்பா. நான் ஆதரவு எங்கே தந்தேன்?? அபாயத்தை தான் சொன்னேன்.

    ReplyDelete
  11. இதோ அந்தப் பின்னூட்டங்கள் ராஜ்வனஜ் மற்றும் அசுரன் அவர்களுடைய எதிர்வினைகளுடன். எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு வார்த்தை மசுருன்னு ஒரே ஒரு முறை வந்திருக்கு. அதுவும் முரளி மனோஹர் உபயோகிச்சதுல இல்லை:

    //
    Muralimanohar(#02717864569534015186) said...
    நீங்க சொல்றது சுவாரசியமா இருக்கு. ஆனா ஒண்ணு நிச்சயம். எதையாச்சும் நம்பித்தான் ஆகணும். அது என்ன என்பதிலேதான் மனுசனுக்கு மனுசன் வித்தியாசம். யாருக்கு எது சௌகரியமா இருக்கோ அதை நம்பிட்டு போறாங்க. அவ்ளோத்தானே.

    நாளைக்கு நாம உயிரோட இருப்போங்கறது கூட ஒரு வகை நம்பிக்கைதானே.
    முரளி மனோஹர்
    2:38 AM

    rajavanaj said...
    வாங்க முரளிமனோகர்(ஜோஷி?) புதுசா வர்ரீங்க போல..

    // யாருக்கு எது சௌகரியமா இருக்கோ அதை நம்பிட்டு போறாங்க.//

    அப்படியெல்லாம் விடமுடியாது நன்பரே.. உங்க 'நம்பிக்கை' பெரும்பான்மையான மக்களோட வாழ்க்கை சம்பந்தப் பட்டதா இருக்கும் போது அதில தலையிட்டே ஆக வேண்டி இருக்கு..

    இந்த இடத்தில வெறும் ஞான மார்க்கத்தவனாக இருப்பதோ நாத்திகனாக இருப்பதோ வேலைக்காவாது.. ஒரு சமூக அரசியல் பார்வை அவசியம்.

    மத்தபடி ஒரு பத்து சதவீத பேரு தங்களுக்கு சவுரியமா இருக்குன்றதுக்காக 90% பேரை ஏமாத்திட்டும் சுரண்டிட்டும் இருக்கறத வேடிக்கை பாத்துட்டு வீட்டுக்குள்ள உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது..

    என்ன சொல்றீங்க??

    அடிக்கடி வாங்க.. மத்த பதிவுகளையும் படிச்சு ஏதாவது கருத்து சொல்லுங்க..//

    //Muralimanohar(#02717864569534015186) said...
    "அடிக்கடி வாங்க.. மத்த பதிவுகளையும் படிச்சு ஏதாவது கருத்து சொல்லுங்க.."

    அப்படீங்கறீங்க ஆனா என்னோட ரெண்டாவது பின்னூட்டத்தையே இன்னும் போடல்லியே.

    அது கிடச்சா போடுங்க, இல்லேன்னாக்க இப்போ சொல்லறதையாவது போடுங்க. ரெண்டுத்தையுமே போட்டாலும் சரிதான்.

    "அப்படியெல்லாம் விடமுடியாது நண்பரே.. உங்க 'நம்பிக்கை' பெரும்பான்மையான மக்களோட வாழ்க்கை சம்பந்தப் பட்டதா இருக்கும் போது அதில தலையிட்டே ஆக வேண்டி இருக்கு.."
    நீங்க யார் ஐயா விடறத்துக்கு? யார் தலையிடுவாங்க? அவங்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யாரு? இல்லே நீங்களாகவே எடுத்துக்கிட்டீங்களா?

    நீங்க சொல்லற அதே 10%லேதான் நீங்களும் இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். இவ்வளோ கம்யூனிசம் எல்லாம் பேசறீங்களே, உங்கள் சம்பளத்தை பூராவும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துட்டு அவங்க கொடுக்கற குறைந்தபட்ச தொகையை வாங்கிக்க மன உறுதி இருக்கா? இல்லேன்னாக்க எல்லாமே ஊருக்கு உபதேசம்தானா? அப்படித்தான் பல கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் இருக்காங்கன்னாவது தெரியுமா? (நல்லக்ண்ணு போன்றவங்க).

    நீங்களோ அசுரனோ எங்கே வேலை செய்யறீங்கன்னு தெரியல்லே, ஆனா நீங்க ரெண்டு பேரும் அலட்டறதைப் பாத்தாக்க இதை சொல்லாம இருக்க முடியல்லே.

    இப்போ உலகத்துலே எந்த தேசத்திலேங்க கம்யூனிஸ்ட் ஆட்சி இருக்கு? சீனா ரஷ்யா ரெண்டு தேசத்துலேயும் அதை தூக்கி கெடாசிட்டாங்க. வட கொரியால்லே செத்த ஜனாதிபதிக்கு அப்புறம் அவரோட பிள்ளைதான் ஜனாதிபதி. காஸ்ட்ரோவும் தன்னோட தம்பிக்குத்தான் ஆட்சி பொறுப்பை கொடுத்திருக்காரு? எந்த தைரியத்துல இந்த செத்துப் போன கோட்பாட்டை வச்சுக்கிட்டு கத்தி சுழட்டுவீங்க?

    முரளி மனோஹர்

    4:01 AM


    அசுரன் said...
    சரி முரளி நாங்க நேர்மையற்ற பொறுக்கிகளாகவே இருந்து விட்டு போகிறொம். இங்கு நாங்கள் பெசும் விசயங்க நேர்மையாக இருக்கிறாதா என்று பார்க்கவும் நேர்மையாக இருக்கும் ப்ட்சத்தில் அதை கடைபிடிப்பதில் உங்க்ளுக்கு என்ன பிரச்சனி வந்து விடப் போகிறது....

    அசுரன்

    4:17 AM


    rajavanaj said...
    முரளி மனோகர்,

    உங்கள் நடை சென்னையில் உள்ள என் நன்பர் ஒருவரை ( அவரும் பதிவர் தான்) நினைவூட்டுகிறது.. ;-)

    //அப்படீங்கறீங்க ஆனா என்னோட ரெண்டாவது பின்னூட்டத்தையே இன்னும் போடல்லியே.//

    இல்லை நன்பரே இதைத் தவிர வேறு பின்னூட்டங்கள் கிடையாது..

    //நீங்க யார் ஐயா விடறத்துக்கு? யார் தலையிடுவாங்க? அவங்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யாரு? இல்லே நீங்களாகவே எடுத்துக்கிட்டீங்களா?//

    உங்கள் மனப் போக்கு புரிகிறது.. அதாவது.. அதிகாரம் என்பது 'விதிக்கப்பட்ட' சிலருக்குத் தான்.. எங்களைப் போன்ற சாமானியர்கள் அதிகாரத்தை கைப்பற்றவோ, மாற்றங்களை ஏற்படுத்தவோ கூடாது. பப்பர மிட்டாய் சப்பிக் கொண்டு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.. அப்படித்தானே?

    //நீங்க சொல்லற அதே 10%லேதான் நீங்களும் இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். இவ்வளோ கம்யூனிசம் எல்லாம் பேசறீங்களே, உங்கள் சம்பளத்தை பூராவும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துட்டு அவங்க கொடுக்கற குறைந்தபட்ச தொகையை வாங்கிக்க மன உறுதி இருக்கா? இல்லேன்னாக்க எல்லாமே ஊருக்கு உபதேசம்தானா? அப்படித்தான் பல கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் இருக்காங்கன்னாவது தெரியுமா? (நல்லக்ண்ணு போன்றவங்க).

    நீங்களோ அசுரனோ எங்கே வேலை செய்யறீங்கன்னு தெரியல்லே, ஆனா நீங்க ரெண்டு பேரும் அலட்டறதைப் பாத்தாக்க இதை சொல்லாம இருக்க முடியல்லே.//

    முதல்ல வாங்கற காசு கைக்கும் வாய்க்குமே போதலை.. :) மத்தபடி வெறும் காசு கொடுக்கறது தான் ஒரு சித்தாந்தத்தை நம்புவதற்கும் கடைபிடிப்பதற்கும் அடிப்படை இலக்கணம் என்கிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு சமுதாயம் கண்முன்னால் மாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் போது அந்த மாற்றத்தில் பங்கு பெறுவது தான் ஒவ்வொருவனின் வரலாற்றுக் கடமை.. மற்றபடி 'லேபிலில்' ஒன்றும் கிடையாது..

    யார் அலட்டுகிறார்கள்? வேதம், மசுரு, மந்திரம், சாஸ்திரம், போலியான தேசபக்தி அப்படின்னு இன்னிக்கு இனையத்துல பல பேரு அலட்டிகிட்டு திரியறாங்க.. அங்க போய் கேளுங்க வோய்.. எங்களோட வேலை அவங்களோட அலட்டலை அம்பலப் படுத்துவது மட்டும் தான். அது Action இது reaction.. got it??


    //இப்போ உலகத்துலே எந்த தேசத்திலேங்க கம்யூனிஸ்ட் ஆட்சி இருக்கு?//

    'இப்போ' விடுங்க.. முதல்ல 'எப்போ' இருந்துன்னு சொல்லுங்க அப்புறமா பதில் சொல்றேன்

    4:19 AM


    அசுரன் said...
    அப்புறம் முரளி ஜொஸி நாங்க யார்க்கிட்டயும் சம்பளத்த முழுசா கொடு என்று உபதேசம் செய்யலியே?

    அப்படி உபதேசம் செய்கிறவர் நண்பர் மா. சிவகுமார். ஏனெனில் அவர்தான் எந்த சமூக காலகட்டத்திலும் சொசலிச வாழ்க்கை வாழ்ந்திட முடியும் என்கிறார். நாங்களோ அப்படியல்ல என்கிறோம்.. சமூகம் பரிணாம வளர்ச்சியில்தான் சோசலிசம் அடுத்து கம்யுனிசத்தை அடையும் என்கிறோம்....

    நாம் வாழும் சமூகத்தின் பொருளாதார அமைப்பு முறை என்னவோ அதற்குற்ப்பட்டுதான் வாழ் முடியும். அதிலிருந்து இந்த சமூகத்தின் வளர்ச்சியை பகுத்தறிந்து புரிந்து கொண்டு அத்ற்க்கு பங்களிப்பு செய்வதுதான் க்டமையாக இருக்க முடியும்.

    அதாவது இவர் கருத்துப் படி வச்சாக்க முடி சிரைச்சாக்க மொட்டை. மொத்தத்துல மக்களுக்கு விடுதலை வந்திரக் கூடாது.

    எங்க சம்பளம் குறித்த உங்களது யூகங்கள் ஒரு பக்கம் இருக்க. அதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்... நாங்கள் எமது திறமைக்கு ஓரளவுவாவது வாய்ப்புக் கொடுக்கும் ஒரு வேளையில் இருந்து கொண்டு மனித குலத்தின் விடுதலைக்காக போராடுகிறொம்.

    நீஙகள்??? அந்த நேர்மையற்ரற சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு ஒன்றும் செய்யாதெ என்கிறீர்கள்....

    கொஞ்சம் கொஞ்சமா சிரைச்சி மண்ட முடிய நாங்க சீர்திருத்திக் கொள்கிறோம். ஒட்டுக்கா சிரைச்சாத்தான் சிரைப்போம் என்று இருந்து கொண்டு சொறி சிரங்குடன் அவதிப்படுவேன் என்று வீம்பு பிடிப்பவரை என்ன செய்வது.... ;-))

    சீனா ரஸ்யாவில் தோற்றது கம்யுனிசம் இல்லை என்று நான் சொல்கிறேன் நீங்கள் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் எப்படி தொற்றது என்று தங்களால் விளக்க முடியுமா?

    கயுபாவில் கம்யுனிசம் நடைமுறையில் உள்ளதாக நாங்கள் சொல்லுவதில்லை. இந்த சல்லியை விட்டால் உங்க ஆட்களுக்கு வேற ஜல்லியே கிடையாது போலுக்கு....

    ராஜவனஜ்ஜின் ஒவ்வொரு ப்திவிலும் இந்த கேள்விகள் கேட்க்கப்பட்டு ஒவ்வொரு முறையும் பதில் சொல்லப்பட்டவைதான்... :-))

    நல்ல புதிய கேள்விகள் குற்றச்சாட்டுகளுடன் வரவும்.. கற்பனா சக்தி குறைவாக இருக்கீறது என்று நினைக்கிறேன்... அய்யோ பாவம்!!!

    அசுரன்

    4:27 AM


    Muralimanohar(#02717864569534015186) said...
    "உங்கள் நடை சென்னையில் உள்ள என் நண்பர் ஒருவரை ( அவரும் பதிவர் தான்) நினைவூட்டுகிறது.. ;-)"
    எனக்குக் கூட நீங்களும் அசுரனும் ஒரே ஆள்தான்னு படுது. அதுவா இங்கே பிரச்சினை?

    "உங்கள் மனப் போக்கு புரிகிறது.. அதாவது.. அதிகாரம் என்பது 'விதிக்கப்பட்ட' சிலருக்குத் தான்.. எங்களைப் போன்ற சாமானியர்கள் அதிகாரத்தை கைப்பற்றவோ, மாற்றங்களை ஏற்படுத்தவோ கூடாது. பப்பர மிட்டாய் சப்பிக் கொண்டு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.. அப்படித்தானே?"
    கெடையவே கெடையாது. அவனவன் தன் வேலையைப் பாத்துக்கட்டுமே. நீங்களும் யாரையும் உங்க வாழ்க்கை முறையிலே குறுக்கே வர அனுமதிக்காதீங்க. (அதத்தான் நீங்க செஞ்சுக்கிட்டிருக்கீங்க, உபதேசம் மட்டும் மத்தவங்களுக்கு).

    "சரி முரளி நாங்க நேர்மையற்ற பொறுக்கிகளாகவே இருந்து விட்டு போகிறோம். இங்கு நாங்கள் பேசும் விசயங்க நேர்மையாக இருக்கிறாதா என்று பார்க்கவும் நேர்மையாக இருக்கும் ப்ட்சத்தில் அதை கடைபிடிப்பதில் உங்க்ளுக்கு என்ன பிரச்னை வந்து விடப் போகிறது...."
    கருத்துக்கள் சுத்தமா நேர்மையில்லேங்கறதுனாலத்தானே பின்னூட்டமே போடறேன்.

    "'இப்போ' விடுங்க.. முதல்ல 'எப்போ' இருந்துன்னு சொல்லுங்க அப்புறமா பதில் சொல்றேன்".
    அப்போ சோவியத் யூனியன், மாவோவின் சைனா, நீங்க விழுந்து விழுந்து கும்பிடும் ஸ்டாலின் மாவோ எல்லாத்தையும் மறந்துட்டீங்களா? ஒரு தேசமே அழிஞ்சுதே, இந்த உருப்படாத கம்யூனிசத்தாலே?

    "ஒரு சமுதாயம் கண்முன்னால் மாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் போது அந்த மாற்றத்தில் பங்கு பெறுவது தான் ஒவ்வொருவனின் வரலாற்றுக் கடமை.. மற்றபடி 'லேபிலில்' ஒன்றும் கிடையாது.."
    எப்படி பங்கு பெறறீங்க, இந்த மாதிரி வெட்டி பதிவுகள் போட்டா?

    இப்போ ஒரு சின்ன கதை ஒரு கம்யூனிஸ்டை பத்தி. ஒரு கம்யூனிஸ்டு எல்லாத்தையும் எல்லோருக்கும் பங்கு போடணும்னு சொனானாம். அவன் கிட்ட கேட்ட கேள்வி பதிலை இப்போ பாப்போமா?

    கே.- அதாவது உன்கிட்ட ரெண்டு கார் இருந்தாக்க..
    ப. அதுல ஒண்ணை உடனே பொதுவில கொடுத்துடுவேன்
    கே.- ரெண்டு வீடுங்க இருந்தா?
    ப. - கண்டிப்பா கொடுப்பேன் ஒரு வீட்டை சமூகத்துக்கு
    இப்படியே பலா கேள்விகளுக்கப்பாலே கடைசி கேள்வி.
    கே. உன்கிட்ட ரெண்டு சொக்காய் இருந்தாக்க, ஒண்ணை கொடுத்துடுவியா?
    ப. கண்டிப்பா தர மாட்டேன்
    கே. ஏன்?
    ப. - ஏன்னாக்க என்கிட்ட நெஜம்மாவே ரெண்டு சட்டை இருக்கு.
    முரளி மனோஹர் ஜோஷி//

    //rajavanaj said...
    முரளி மனோகர்...

    :)))))).. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு..

    //கெடையவே கெடையாது. அவனவன் தன் வேலையைப் பாத்துக்கட்டுமே.//

    ஹிஹி.. அப்ப இதுக்கு என்னா அர்த்தமுங்க? எவனெவன் எந்தெந்த வேலையை செய்யனும்?? மணியாட்டறதுக்கு ஒருத்தன், சண்டப் போட ஒருத்த, பணம் சம்பாதிக்க ஒருத்தன்.... மிச்சமிருக்கிற பெரும்பான்மையானவங்களுக்கு??? அதான் முன்னாடியே கேட்டேன் "பப்பரமிட்டாயா?" என்று.

    //கருத்துக்கள் சுத்தமா நேர்மையில்லேங்கறதுனாலத்தானே பின்னூட்டமே போடறேன்.//

    அடேங்கப்பா... கண்டுபிடிச்சுட்டாருயா.. அப்படியே கருத்துக்கள்ல எங்க நீங்க நேர்மைக் குறைவைக் கண்டீங்கன்னும் சொன்னா ஏதோ நாங்களும் கொஞ்சம் அறிவ 'வளர்த்துக்குவோம்'.. சொல்றீங்களா?


    //அப்போ சோவியத் யூனியன், மாவோவின் சைனா, நீங்க விழுந்து விழுந்து கும்பிடும் ஸ்டாலின் மாவோ எல்லாத்தையும் மறந்துட்டீங்களா? ஒரு தேசமே அழிஞ்சுதே, இந்த உருப்படாத கம்யூனிசத்தாலே?//

    நான் பொன்ஸுக்கு கொடுத்த இரண்டு சுட்டிகளையும் நல்ல படித்து விட்டு மீண்டும் வாருங்கள்.. அப்படியே மேலே அசுரனின் பின்னூட்டத்தையும் ஒரு முறை படித்து விடுங்கள்

    மற்றபடி நீங்கள் விட்ட 'கதைக்கு' ஏற்கனவே அசுரன் பதில் சொல்லிவிட்டார்.. படிக்காமல் பின்னூட்டமிட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    5:10 AM


    அசுரன் said...
    முரளி ஜொஸி ,

    என்னெ சொல்ல வர்றீங்க.... பங்கு போடுறத பத்தியா... ஆமா சரிதான் உற்பத்திய எல்லாரும் சமமா பங்கு போட்டு எடுத்துக்க வேனும்....

    அது தனிமனிதன் என்ற அளவில் எந்தளவு செய்யலாம் என்று ஒரு அளவையும் நீஙகளே சொல்லுங்களேன்.. அப்புறம் அதன் சாத்தியப்பாடு இன்றைய சமூக அமைப்பில் உள்ளதா இல்லையா என்பது தெளிவாகும்.....
    அதாவது ஒரு எ-கா வுக்கு நம்ம ராஜவனஜ் ஒரு 15000 சம்பளம் வாங்குறார்... எல்லாருக்கும் சம்மமா பிரிக்கனும்னாக்கா... அவரோட சம்பளத்த இந்தியாவின் வறுமையானவர்கள்(குறைந்த ப்ட்சம் டில்லியின்) பிரித்தால் எத்தனை பைசா வரும் ஒரு ஆளுக்கு?

    மற்றபடி தேவைக்கேற்ற பொருட்கலை வைத்திருப்பது எனில் நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம்(ராஜவனஜ்ஜும் அப்படித்தான் இருப்பார் என்று நம்புகிறென்).

    ஆக, இந்த சமூக அமைப்பை தூக்கியெறியாத பட்சத்தில் சமமாக பங்கு பிரித்து எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பது சாத்தியமில்லை என்று சொல்கிறீர்களா? சாத்தியமிருக்கிறது என்று சொல்கிறீர்களா?

    இருக்கிறது எனில் அந்த வழிமுறை சொன்னால் தேவலாம்... மா. சிவக்குமாரிடமும் இது குறித்து உதவி கோரலாம். அப்படி சாத்தியமில்லை என்பதைத்தான் ராஜவனஜ்ஜின் 15000 சம்பளத்தை சில கோடி ஏழைகளுடன் பங்கு பிரிக்கும் எ-கா காட்டுகிறது.

    கட்டுரையின் தலைப்புக்கு வாங்க்... நான் சொன்ன பிற பதில்களை மறக்காமல் படிங்க்...

    அந்த பிற பதில்கள்:
    //அப்புறம் முரளி ஜொஸி நாங்க யார்க்கிட்டயும் சம்பளத்த முழுசா கொடு என்று உபதேசம் செய்யலியே?

    அப்படி உபதேசம் செய்கிறவர் நண்பர் மா. சிவகுமார். ஏனெனில் அவர்தான் எந்த சமூக காலகட்டத்திலும் சொசலிச வாழ்க்கை வாழ்ந்திட முடியும் என்கிறார். நாங்களோ அப்படியல்ல என்கிறோம்.. சமூகம் பரிணாம வளர்ச்சியில்தான் சோசலிசம் அடுத்து கம்யுனிசத்தை அடையும் என்கிறோம்....

    நாம் வாழும் சமூகத்தின் பொருளாதார அமைப்பு முறை என்னவோ அதற்குற்ப்பட்டுதான் வாழ் முடியும். அதிலிருந்து இந்த சமூகத்தின் வளர்ச்சியை பகுத்தறிந்து புரிந்து கொண்டு அத்ற்க்கு பங்களிப்பு செய்வதுதான் க்டமையாக இருக்க முடியும்.

    அதாவது இவர் கருத்துப் படி வச்சாக்க முடி சிரைச்சாக்க மொட்டை. மொத்தத்துல மக்களுக்கு விடுதலை வந்திரக் கூடாது.

    எங்க சம்பளம் குறித்த உங்களது யூகங்கள் ஒரு பக்கம் இருக்க. அதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்... நாங்கள் எமது திறமைக்கு ஓரளவுவாவது வாய்ப்புக் கொடுக்கும் ஒரு வேளையில் இருந்து கொண்டு மனித குலத்தின் விடுதலைக்காக போராடுகிறொம்.

    நீஙகள்??? அந்த நேர்மையற்ரற சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு ஒன்றும் செய்யாதெ என்கிறீர்கள்....

    கொஞ்சம் கொஞ்சமா சிரைச்சி மண்ட முடிய நாங்க சீர்திருத்திக் கொள்கிறோம். ஒட்டுக்கா சிரைச்சாத்தான் சிரைப்போம் என்று இருந்து கொண்டு சொறி சிரங்குடன் அவதிப்படுவேன் என்று வீம்பு பிடிப்பவரை என்ன செய்வது.... ;-))//
    அசுரன்//

    பார்க்க: http://vanajaraj.blogspot.com/2006/12/blog-post_17.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. அனானி நண்பா. நீ சொன்ன பின்னுட்டத்தை டோண்டு கொடுத்து இருக்கிறார். படித்து விட்டேன்.
    டோண்டு அவர்களே, அந்த பின்னூட்டத்திற்கு நன்றி.

    என் ஆதரவு டோண்டுவுக்கு தேவை இல்லை. நானும் அவருக்கு ஆதரவு தரவில்லை.

    ReplyDelete
  13. அடடா பார்ப்பன நண்பரே,

    இந்த பதிவில் சென்று படித்துப் பாருங்கள்.

    ==================================

    முரளிமனோகரின் பின்னூட்டத்தில் இருந்தவை இந்த வரிகள் தான்.

    "தோழர் வந்தார். "ஏய், அந்த ஆள் அமெரிக்கன். உன் உழைப்பை சுரண்டுகிறான். இனிமேல் அவனுக்கு நீ செருப்பு தைக்ககூடாது என்றார். தொழிலாளி விழிக்கிறான். "ஐயா அந்த ஆள் நான் கேட்ட கூலி கொடுத்தான். நான் தைக்க வில்லை என்றால் அந்த சப்பை மூக்கு தொழிலாளி தைத்துகொடுப்பான். நானும் புள்ளைகுட்டி காரனய்யா" என்றான்".

    அடிமைபுத்தியுள்ள இந்தியர்களை திருத்தவே முடியாது என்று தனது சக தோழர் ராஜாவிடம் அசுரத்தனமாக புலம்பினார் இந்தத் தோழர். பிறகு தாங்கள் வேலை செய்யும் --- நிறுவனத்துக்கு சென்றனர் அவர்கள்.

    அதானே, அவங்களும் பிழைக்கணும் இல்லே.

    முரளி மனோஹர்

    (மேலே கோடுபோட்ட இடத்தில் ஒரு கம்பனியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பதிவர்கள் வேலை செய்யும் கம்பனியின் தகவலை நான் வெளியிட முடியாது என்பதால் அனுமதிக்கவில்லை.இதை தவிர அந்த பின்னூட்டத்தில் வேறு எதுவும் இல்லை-selvan)

    அப்படின்னு செல்வன் சொல்லி இருப்பதைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? அந்த டோண்டு வேறு யாரோ வேலை பார்க்கும் முகவரியை எழுதி இருக்கிறான். அதனைத்தான் செல்வன் திருத்தி இருக்க வேண்டும்!


    அடுத்தவன் வேலை பார்க்கும் முகவரியை செல்வன் பதிவிலே டோண்டு எழுதியது தவறான செயல் ஆகாதா? ஏன் இந்த கிழட்டு ஃபாடு அதுபோல செய்ய வேண்டும்?

    செல்வன் உண்மையைச் சொல்லவேண்டும், அது யார் முகவரி என.

    அப்போதுதான் டோண்டுவின் உண்மை முகம் உலகுக்கு தெரியும்!

    ReplyDelete
  14. கிழவனிடம் "இவன் ரொம்ப நல்லவண்டா.. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா" என்று் யாரோ சொன்னார்களாம். அது தான் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் தனக்குள்ளே ரசித்துக் கொண்டிருக்கிறாராம்.

    எனக்கு என்னமோ கூட்டத்தில் சிக்கி தர்ம அடி வாங்குபவனைப் பார்ப்பது போல் இருக்கிறது. சிரிப்பாகவும் இருக்கிறது. பரிதாபமாகவும் இருக்கிறது.

    என்னாச்சு... இப்பல்லாம்.உங்களின் பதிவுகள் அடிக்கடி வருவதில்லையே..... (நான் சொல்லக் கூடாது தான்.. காரணம், நான் கடைசியாக பதிவிட்டு ஒரு மாதமாயிற்று)

    ReplyDelete
  15. I havea doubt? Who is this person?
    http://munivelu.blogspot.com/

    http://www2.blogger.com/profile/04553556820907257167

    January 30, 2007 12:18 PM
    munivelu(#04553556820907257167) said...
    என்ன டோண்டு சார், நீங்களும் உஜாலாவுக்கு மார்றிட்டீங்க போலிருக்கு?

    நீங்க சாதிப்பெயரைப் பத்தி சொல்றதை இங்க இருப்பவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல்லையே. அது சரி நீங்க அதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்கங்கறதை எங்அ எல்லோருக்கும் தெரியுமே. :))

    முனிவேலு கவுண்டர் (ஹி ஹி)

    ReplyDelete
  16. இந்த நபரின் மேல் எனக்குக் கொஞ்சம் மரியாதை இருந்தது. அவருடைய வயது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். என்னுடைய சில பதிவுகளில் 'முரளி மனோகர்' என்னும் பெயரிலும் அனானிமஸாகவும் வந்து வாந்தியெடுத்தது இவர் தானோ என்கிற சந்தேகம் எனக்கு முதலிலேயே உண்டு. தொலைபேசியில் கூப்பிட்டு நேரடியாகவே கேட்டதற்கு அவர் "கிடையவே கிடையாது" என்று சாதித்து விட்டார். நானும் பெயரில் என்ன இருக்கிறது கருத்தை மட்டும் பார்ப்போமே என்று விட்டு விட்டேன்.

    தற்போது அம்பலப்பட்டுப் போனவுடன் போர் உத்தி என்றெல்லாம் அலப்பரை பண்ணிக்கிட்டு இருக்கிறார்.

    பல பெயர்களில் ஐ.டி வைத்திருப்பது ஒன்றும் கொலைக் குற்றமாக நான் நினைக்கவில்லை - அதே நேரம் தானே பல பெயர்களில் பேண்டு விட்டு மற்றவர்களை இத்தனை நாள் இதே காரணங்களுக்காக குற்றம் சொல்லி - எனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம் என்கிற அளவில் ஒரு perfect பார்ப்பனப் பன்னாடையாக நடந்து கொண்டிருந்திருக்கிறார்.

    எதிர்க்கருத்து இருப்பவர்கள் அனைவரையும் "அவாள்ளாம் போலி டோண்டு குரூப்பு சார்" என்று போகும் இடமெல்லாம் சேறு வாரியிறைப்பதையே வழக்கமாக கொண்ட இந்த கும்பல் ( இதில் நீங்களும் பாதிக்கப் பட்டவர் என்பதால் இதன் வலி என்னவென்று உங்களுக்குப் புரியும் ) .. இப்போது தாங்களே அம்பலப்பட்டவுடன் "போர் உத்தி" என்று முழு பூசனிக்காயை சிக்கன் பிரியானிக்குள் மறைக்கப் பார்ப்பது செம காமெடி....

    ராஜா.

    ReplyDelete
  17. நாகரீகமான பின்னூட்டங்களுக்கு நன்றி அனானி நண்பர்களே!!
    எனக்கு பதிவுகளை வாசிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் தான் அடிக்கடி எழுதுவதில்லை. ஆனால் என்னுடைய உண்மையான பதிவில் அவ்வப்போது எழுதுகிறேன்.

    ReplyDelete
  18. ராஜா!! நான் எதையும் எந்த பிரியாணிக்குள்ளும் மறைக்கவில்லை. அதிலும் அற்புதமான எனக்கு பிடித்த சிக்கன் பிரியாணியில் பூசணிக்காயா?? சே சே... :-)

    ReplyDelete
  19. முனிவேலு யாருப்பா நீ???

    ReplyDelete
  20. //ஒன்று செய்யுங்கள், நீங்கள் என் பதிவில் இட்ட பின்னூட்டங்களை எல்லாம் எடுத்து விடுங்கள். எனக்கு அவை தேவையில்லை//
    http://thamizhachi.blogspot.com/2007/02/blog-post.html
    இதை படிச்சீங்களா?என்ன திமிர்,அவனுக்கு
    இதுக்கு என்ன பதில் சொல்றிங்க

    ReplyDelete
  21. //
    //ஒன்று செய்யுங்கள், நீங்கள் என் பதிவில் இட்ட பின்னூட்டங்களை எல்லாம் எடுத்து விடுங்கள். எனக்கு அவை தேவையில்லை//
    http://thamizhachi.blogspot.com/2007/02/blog-post.html
    இதை படிச்சீங்களா?என்ன திமிர்,அவனுக்கு
    இதுக்கு என்ன பதில் சொல்றிங்க
    //அவர் சொன்னதை எல்லாம் செய்ய முடியாது. வார்த்தையை கொட்டிவிட்டப்பின் எப்படி அள்ளுவது??? எனக்கு அவரை பற்றி கவலை இல்லை. இதே நிலை உங்களுக்கோ எனக்கோ வராது என்பது என்ன நிச்சயம்? அதுதான் என் பயம்.

    ReplyDelete
  22. //பின் குறிப்பு 1 : ஒரே நாளில் டோண்டுவை தவிர மற்ற எல்லாரும் நல்லவர் ஆகி விட்டார்கள். அதைத்தான் என்னால் நம்ப முடியவில்லை.//

    அப்படி போடு!!!

    பின் குறிப்பு : டோண்டு சார் செய்தது/செய்வது சரியா தவறா என்பதை பற்றி அல்ல இந்த பின்னூட்டம்.

    ReplyDelete
  23. டோண்டு செய்த தவறு என்ன? மனச்சாட்சியிடம் பேசிப்பாருங்கள்.
    கலப்புத் திருமணத்தில் தமிழ் சமூகத்தில் சர்ச்சை உருவாகவில்லையா?
    அவருடைய அனுபவத்தில் ஆயிரம் பார்த்திருப்பார். அவர் அதை எழுதுவதில் என்ன தவறு? அவரை ஐயங்கார் எனப் பார்க்காமல், ஒரு அனுபவமிக்க மனிதனாக பார்க்க ஏன் முடியவில்லை?
    ஏனைய சாதிகளுக்குள் உருவாகும் கலப்பு திருமணங்களில் குழப்பம் உருவாகியதை நீங்கள் அறியவில்லையா? இதை நீங்கள் அறியாவிடின்,
    ஒன்று உங்களுக்கு வயது போதாது இல்லாவிடின் அனுபவம் இல்லை.
    அவ‌ர் முக‌மூடியுட‌ன் வ‌ரவில்லை.

    ச‌ரி, பிராமணர்களைவிடுங்க‌ள், ஏனைய‌ சாதிக‌ளுக்கிடையே சாதிய‌ம் நீங்க‌ள் பார்ப்ப‌தில்லையா? உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள்? பலருக்கு பாரதித‌ச‌ன் கூறிய‌து போன்று காத‌ல் திரும‌ண‌ம் இல‌க்கிய‌த்தில் இனிக்கும், வாழ்க்கையில் கச‌க்கின்றது.

    டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.

    மனித‌ன்.

    ReplyDelete
  24. டோண்டு செய்த தவறு என்ன? மனச்சாட்சியிடம் பேசிப்பாருங்கள்.
    கலப்புத் திருமணத்தில் தமிழ் சமூகத்தில் சர்ச்சை உருவாகவில்லையா?
    அவருடைய அனுபவத்தில் ஆயிரம் பார்த்திருப்பார். அவர் அதை எழுதுவதில் என்ன தவறு? அவரை ஐயங்கார் எனப் பார்க்காமல், ஒரு அனுபவமிக்க மனிதனாக பார்க்க ஏன் முடியவில்லை?
    ஏனைய சாதிகளுக்குள் உருவாகும் கலப்பு திருமணங்களில் குழப்பம் உருவாகியதை நீங்கள் அறியவில்லையா? இதை நீங்கள் அறியாவிடின்,
    ஒன்று உங்களுக்கு வயது போதாது இல்லாவிடின் அனுபவம் இல்லை.
    அவ‌ர் முக‌மூடியுட‌ன் வ‌ரவில்லை.

    ச‌ரி, பிராமணர்களைவிடுங்க‌ள், ஏனைய‌ சாதிக‌ளுக்கிடையே சாதிய‌ம் நீங்க‌ள் பார்ப்ப‌தில்லையா? உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள்? பலருக்கு பாரதித‌ச‌ன் கூறிய‌து போன்று காத‌ல் திரும‌ண‌ம் இல‌க்கிய‌த்தில் இனிக்கும், வாழ்க்கையில் கச‌க்கின்றது.

    டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.

    மனித‌ன்.

    ReplyDelete
  25. நண்பர் கரு.மூர்த்தி அவர்களே. உங்களின் பின்னுட்டத்தினை சிறிது மாற்றம் செய்ய வேண்டி இருந்தது.
    //
    அப்படி என்னய்யா டோண்டு செய்துவிட்டார் ? உங்க அம்மாவை விபச்சாரத்திற்க்கு அனுப்பச்சொல்லி மெய்ல் அனுப்பினாரா , அல்லது மிக மோசமாக உள்ளம் காயப்படுமளவிற்க்கு கெட்ட வார்த்தைகளால் எழுதினாரா எழுதினாரா ?

    திமுக பூத் **ண்ட் சொல்கிறார் வாத்தைகளில் அல்லவாம் வன்முறை , கருத்தில்தானாம் , நான் அனுப்பட்டுமா ஒரு மெய்ல் கருத்து வன்முறை இல்லாத வார்த்தை வன்முறை மெய்ல் ? (நானும் திராவிடந்தானே , எனக்கு வராதா அந்த மொழி?)



    இதையெல்லாம் செய்தவன் என்பெயருள்ளவன் , ( நான் சொந்த பெயரில் வந்தபோது மோசமாக பேசியதால் இப்போது இப்பெயர் , இந்த பெயரை அவன் கேவல படுத்தட்டுமே )

    அந்த மோசமான மனிதன் நிச்சயம் **** மனிதன் , என் பெயருள்ளவன் , யாருக்கு வேண்டும் ஆதாரம் ? நான் தருகிறேன் அவனை ஆதரிக்கும் நாய்களே .

    கரு.மூர்த்தி
    //

    ReplyDelete
  26. நான் கலப்பு திருமணம் செய்து இருப்பவன். திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. என் பெற்றோர் முதலில் எதிர்த்தனர். இப்போது அவர்கள் "நாங்களே தேடி இருந்தாலும் இவ்வளவு நல்ல பெண் பார்த்திருக்க மாட்டோம்" என்று. எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நான் தெரியப் படுத்துகிறேன். சொல்ல மறந்து விட்டேனே. என் மனைவி ஜாதியில் உயர்ஜாதி ஆனலும் என் பொஞ்சாதி ;-)

    ReplyDelete
  27. விடாது கருப்பு அவர்களே, நான் டோண்டு இல்லை. எனக்கு வேறு பெயர் இருக்கிறது.

    ReplyDelete
  28. அடடா என்ற பெயரில் எழுதும் அண்ணாச்சி...

    இரவுக்கழுகார் பதிவைப் பார்த்தீர்களா?

    ஏன் உமக்கு இத்தனை வேஷம்? தூக்கு போட்டு தொங்கலாம் டோண்டு!

    ReplyDelete
  29. இதெல்லாம் ஒரு பொழப்பா

    ReplyDelete
  30. இந்த சந்திப்பு அருமையாக நடை பெற என் வாழ்த்துக்கள்
    - கதிரவன்.

    ReplyDelete
  31. வணக்கம் அடடா அவர்களே.. திரு.டோண்டுவாகட்டும், திரு.முகமூடியாகட்டும்.. திரு.விடாது கருப்பாகட்டும்.. ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். இது இணையதளம். அதிலும் வலைத்தளம். முகம் காட்டாமல் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எழுதலாம்.. இதைப் படிப்பவர்கள் தலையெழுத்து படித்துத் தொலையட்டும்.. நமக்கென்ன வந்தது? டைப் செய்த சில நொடிகள் நேர விரயம் மட்டுமே.. என்பதுதான் அது. ஐயாமார்களே.. எத்தனை எத்தனை தமிழர்கள் என்னைப் போன்ற தமிழ் மேல் ஆர்வம் கொண்டவர்கள்.. காலை உணவை ஆறு இட்லி, மதியம் ஒரேயொரு சாம்பார் சாதம், இரவில் மூணு புரோட்டா என்று பாக்கெட்டில் இருக்கும் காசுகளை எண்ணி எண்ணிச் செலவிட்டு அந்தக் காசில் மிச்சம் பிடித்து நெருக்கியடிக்கும் இண்டர்நெட் சென்டரில் அரைமணி நேரத்திற்கு 10 ரூபாய் கொடுத்து இணைய தளத்தில் பிளாக்கர்ஸை படித்துக் கொண்டிருக்கிறோம்.. நீங்களோ.. நன்கு படித்தவர்கள்.. செலவுக்குக் கஷ்டப்படாதவர்கள். வீட்டிலேயே கம்ப்யூட்டரும், நெட் கனெக்ஷனும் வைத்திருப்பவர்கள்.. பொழுது போகாமல் இணையத்தைப் பயன்படுத்தவதைப் போல் அர்த்தமற்ற சண்டைகளையும், ஆபாசமான வார்த்தைப் போர்களையும் நடத்திக் கொண்டு தமிழின் மானத்தைக் கப்பலேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். என்ன செய்ய? தமிழ் வாழ்கிறதா? அல்லது மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. வாழ்க உங்களது தமிழ்ப் பணி.. வளர்க உங்களது தமிழ்ப் பண்பாடு.

    நன்றியுடன்

    தமிழ்சரண்

    ReplyDelete