Friday, August 25, 2006

15 வயசுலே கல்யாணம்

ஆம்பளை பசங்களுக்கு 15 வயசுல கல்யாணம் பண்ணி வச்சா என்ன நன்மை?

- பத்தாம் வகுப்பு ஒழுங்கா பாஸ் பண்ணுவாங்க.
- பன்னிரெண்டாம் வகுப்பு ஒழுங்கா பாஸ் பண்ணுவாங்க
- சைட் அடிக்கிறது குறையும்
- காதல் கவிதை எழுதுறது குறையும்
- காலேஜ் போகும் போது பஸ்ல தொங்க மாட்டாங்க
- பைக்கை வேகமா ஓட்டி போக மாட்டாங்க
- நைட் வெளியே சுத்த மாட்டாங்க
- குறிஞ்சி, முல்லை மாதிரி புத்தக வியாபாரம் குறையும்
- லவ் மேரேஜ் குறையும்
- பொறுப்பு கொஞ்சம் சீக்கிரமாவே வரும்
- மாமியார் மருமகள் சண்டை குறையும். காரணம் மருமக சின்ன பொண்ணு தானே, மாமியார் நல்லா மிரட்டி வச்சிடுவாங்க :-)

ஆம்பளை பசங்களுக்கு 15 வயசுல கல்யாணம் பண்ணி வச்சா என்ன தீமை?

- பையனோட அப்பா, மருமகளுக்கும் சேர்த்து சம்பாதிக்கணும்
- பையன் வேகமா இருந்துட்டா, பேரனுக்கும் சேர்த்து பையனோட அப்பா தான் சம்பாதிக்கணும்.
- பொண்ணுங்க காலேஜ் போகும் போதோ இல்ல +2 படிக்கும் போதோ 3 மாசம் லீவ் எடுக்க வேண்டி வரும். படிப்பு கெட்டுப் போகும்.
- ஆண் சர்வாதிகாரம் அதிகரிக்கும்
- மக்கள் தொகை பெருகும்
- பீர் வியாபாரம் குறையும்.(இது நன்மையா? தீமையா?)
- மாமியார் மாமனார் கொடுமை அதிகரிக்கும்
- வீட்டோட மாப்பிள்ளையா இருக்குற பசங்களுக்கு படிப்பு பிரஷர் அதிகரிக்கும். (ஃபெயிலானா மாமனாரும், மாமியாரும் குத்தி காட்டுவாங்க)
- முக்கியமான தீமை ஒண்ணு - 35 வயசுல எல்லாரும் தாத்தா ஆய்டுவாங்க :-(

எங்கப்பாரு கிட்ட யாரும் இந்த பதிவை பத்தி சொல்லிடாதீங்க... அப்புறம் அடடாவுக்கு... ச்சீ சொல்ல வெக்கமா இருக்கு.. இருந்தாலும் சொல்லுறேன், பிஞ்சுல பழுத்துட்டியான்னு பெல்ட் பிஞ்சு போற வரை அடிப்பாரு.

2 comments:

  1. //பையனோட அப்பா, மருமகளுக்கும் சேர்த்து சம்பாதிக்கணும்
    - பையன் வேகமா இருந்துட்டா, பேரனுக்கும் சேர்த்து பையனோட அப்பா தான் சம்பாதிக்கணும்.
    //

    ஹாஹா..வாய் விட்டுச் சிரித்தேன்!

    ஹலோ, யாருங்க? அடடா வைப் பெற்ற அப்பாருங்களா? உங்க பையன் உங்க கஷ்டம் புரிஞ்சு நடக்கும் புள்ளைங்கோ..."பாவம் அப்பா தான் சம்பாதிக்கணும்...அதனால கல்யாணத்துக்கு என்ன அவசரம்?" ன்னு கேட்கற புள்ளய பெத்த நீங்க கொடுத்து வச்சவருங்கோ!

    ReplyDelete