12 வது சமச்சீர் கல்வியாண்டு, 12ம் வகுப்பு முதல் நாள்:
ஆசிரியர்: மாணவர்களே, இதுவரை நீங்கள் படித்தது எல்லாம் சுலபம். இந்த வருடம் மிக கடினமாக இருக்கும். மிகவும் கவனமாக படிக்கவும். இது தான் உங்கள் கல்லூரி வாழ்க்கையை முடிவு செய்ய போகிறது. இப்போது பாடத்தை துவக்குவோம்.
உரக்க சொல்கிறார்
"ஒள"
- பார்த்தீர்களா? ஒன்றாம் வகுப்பில் இருந்து 11 வகுப்பு வரை, ஒற்றை எழுத்தை தான் எழுதி படித்தீர்கள் - அ, ஆ, இ, ஈ ...ஒ, ஓ என்று. முதல் முறையாக இரு எழுத்துக்கள் இணைந்து ஒரு எழுத்தாக வருகிறது. இதற்கு பின் வரும் ஆய்த எழுத்தை நீங்கள் சமசீர் கல்லூரியில் படிக்கலாம்....
----------------------------------
15 வருடங்களுக்கு பின்பு....
தொடர் மழை காரணமாக காஷ்மீரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பேங்கலூரூ சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக முடியவில்லை என்று, செல்வி வக்கீல் தெரிவித்தார்.
---------------------------------
20 வருடங்களுக்கு பின்பு....
எனக்கும் கலிங்சர் டிவி சாட்டிலைட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் விண்வெளி துறை சம்பத்தப்பட்டவளும் இல்லை. சாட்டிலைட் எப்படி வேலை செய்கிறது என்று எனக்கு தெரியாது. நான் பட்டன் மட்டும் தான் அமுக்கினேன், அது விர்'ரென்று சென்றது என பனிமொழி கமம்சங் விழாவில் தெரிவித்தார். அவர் மீது சிபி'ஈ' 30G வழக்கில் ஆஜராகும்படி அழைப்பு விடுத்துள்ளது
----------------------------------
25 வருடங்களுக்கு பின்பு
என் தாத்தா விட்டு சென்றது எனக்கான ஊக்கத்தை, ஆக்கத்தை, தாக்கத்தை, தூக்கத்தை.. நான் பின் வாங்க மாட்டேன்.. மூன்று வேலைக்கு மேலே தின்ன மாட்டேன்.. ஜன் (கா பேட்டா) லோக்பால் வரும் வரை தூங்க மாட்டேன்... என்று அன்னபா பசாரேவின் பேரன் சூடான பேட்டி அளித்தார். மேலும் அவர் தனது "அடுத்த " சாகும்வரை உண்ணாவிரத தேதியை அடுத்த மாதம் அறிவிப்பதாக தெரிவித்தார்.
--------------------------------
எத்தனையோ வருடங்களுக்கு பின்பு....
எனக்கு பிறகு யார் தலைவர் என்பதை பொதுக்குழு/செயற்குழு முடிவு செய்யும் என்று கலிங்சர் தெரிவித்தார். அதை டாச்லின் மற்றும் பழகிரு ஆமோதித்தனர்.